Monday, August 24, 2009

நண்பர்களே குமரியின் சிறப்பு காண வாருங்கள்.





133 அடிகளில் உயர்ந்து நிற்கும் "அய்யன் வள்ளுவன்"




பாறைகளுக்கிடையே கடலலைகள் தாலாட்டும் "முட்டம் கடற்கரை" சினிமா காரர்களின் சொர்க்க பூமி .






சின்ன குற்றாலம் என வர்ணிக்கப்படும் "திற்பரப்பு நீர்வீழ்ச்சி".




















பூமியின் முடிவு , கலாச்சாரத்தின் துவக்கம் கன்னியாகுமரி கடற்கரை.




















இயற்கை
துறைமுகம் குளச்சல் , வர்த்தக ரீதியாக மாறாதது அவலம் .


















ஆசியாவின் மிக நீளமான தொங்கும் பாலம் "மாத்தூர் தொட்டில் பாலம் ". " ஆற்றின் மேல் கால்வாய் "

சேர நாட்டின் வரலாற்று சின்னம் "பத்மநாபபுரம் அரண்மனை" . இந்திய கட்டிடகலையின் இன்னொரு பரிணாமம்.

நண்பர்களே குமரியின் சிறப்பு காண வாருங்கள்.

Sunday, August 2, 2009

புதுமுகம் ஒரு அறிமுகம்

அனைவருக்கும் இனிய வணக்கம், நீண்டநாள் வலைப்பூ வாசகனான எனக்கு, தனியாக எதையாவது எழுதி கிழிக்க வேண்டும் என நீண்ட நாளாய் ஆசை. பல சமயங்களில் பின்னுட்டங்கள் எழுதியிருக்கிறேன். சரி எதைப்பற்றி எழுதலாம் என யோசித்து யோசித்து பார்த்தால் வலைப்பக்கங்களில் எழுதாத விஷயங்களே இல்லை என்பது புலனாயிற்று. எனவே தான் அதிகம் அலசப்படாத எனது குமரி மாவட்டம் பற்றி புதிய எதாவது எழுதலாம் என எண்ணியிருக்கிறேன். உங்கள் ஆதரவும் உற்சாகப்படுத்தலும் இருக்கும்படி எழுத முயற்சிக்கிறேன். அப்புறம் ஒரு விஷயம் உங்கள் எல்லாம் எனக்கு நல்லா தெரியும் என்னய தான் உங்களுக்கு தெரியாது. வணக்கம்.

குமரி

கடல்கள் மலைகள் காயல்கள் வயல்வெளிகள் ஆறுகள் கழிமுகங்கள் என எல்லா இயற்கை வனப்புகளையும் ஒருங்கே கொண்டு சிருங்கரித்து விளங்கும் குமரியின் அடையாளம் தென்னந்தோப்பு. அந்த குமரியின் அடையாளங்களை முடிந்த அளவு வெளிப்படுத்துவதே என் வலையின் நோக்கம்.