Thursday, March 25, 2010



குமரி மாவட்டத்தின் சிறப்புகளில் ஒன்றாக திகழ்வது ஆசியாவின் மிக நீளமான தொங்கு பாலம் "மாத்தூர் தொட்டில் பாலம்" .இது 115 அடி உயரமும் 1 கிலோ மீட்டர் நீளமும் கொண்டு அதிசயமாய் நிற்கும் அற்புத பாலம். குமரி மாவட்டத்தின் திருவட்டாறு தாலுக்காவில் அருவிக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட மாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த தொட்டில் பாலம்.
விளவங்கோடு மற்றும் கல்குளம் தாலுகாவிற்கு விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டுசெல்ல மலையின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு பரளி ஆற்றின் குறுக்கே 28 பில்லர்கள் எழுப்பப்பட்டுள்ளது. மேலே ஓடும் கால்வாயிற்கு பட்டணம் கால்வாய் என்டு பெயர். இந்த பட்டணம் கால்வாய் 7 அடி ஆழமும் 7 இன்ச் அகலமும் கொண்டது. 1966 ல் அப்போதைய முதலமைச்சர் திரு கே. காமராஜ் அவர்களால் கட்டப்பட்டது. இதன் கட்டுமான பணிகளுக்காக அப்போது செலவிடப்பட்டது வெறும் 12 .90 லட்சம் ருபாய் மட்டுமே. இப்போது என்றால் நிலைமையை எண்ணி பாருங்கள். மாவட்ட நிர்வாகம் தற்போது பாலத்தின் அருகே குழந்தைகள் பூங்காவும் குளியல் அறைகளும் கட்டி மேலும் மேருகேட்டி உள்ளனர். தற்போது தினமும் நூறிற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். குமரி பக்கம் வந்தால் நீங்கள் பார்க்கவேண்டிய ஸ்தலம் "மாத்தூர் தொட்டில் பாலம்".

2 comments:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete